‘எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.
சிம்புவின் பிறந்த நாளன்று அவருடைய 49-வது படம் அறிவிக்கப்பட்டது. அதனை ‘பார்க்கிங்’ படம் மூலம் கவனம் ஈர்த்த ராம்குமார் இயக்கவுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் முழுக்க கல்லூரிக்குள் நடப்பது போன்று திரைக்கதையை வடிவமைத்துள்ளார் ராம்குமார். இதனால் இதன் படப்பிடிப்பு மே மற்றும் ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.