சிரியா: சிரியாவில் ட்ரூஸ் மதத்தினர் அதிகம் வாழும் சுவைடாவில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் – சிரியா இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியா நாட்டின் ஸ்விடியா மாகாணத்தில் வாழும் சியா பிரிவை சேர்ந்த ட்ரூஸ் இன மக்கள், இஸ்ரேலிலும் சிறுபான்மையினராக உள்ளனர். சிரியாவில் ட்ரூஸ் இனத்தினருக்கும், சன்னி பிரிவை சேர்ந்த பெடோயின் பழகுடியினருக்கும் மோதல் வெடித்த நிலையில், அதில் சிரியா ராணுவம் தலையிட்டது. அங்கு நடந்த மோதல்களில் பெண்கள், குழந்தைகள் என 321 பேர் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே தங்கள் இனத்தினருக்கு உதவ இஸ்ரேலில் இருந்து ட்ரூஸ் இனமக்கள் எல்லை தாண்டி சென்றதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஸ்விடியா மாகாணத்தில் இருந்து சிறிய ராணுவம் பின்வாங்க வேண்டும் என்று கூறிய இஸ்ரேல், சிரியா பாதுகாப்பு அமைச்சகத்தை தாக்கியது. இந்த சூழலில் ஸ்விடியாவில் இருந்து 20,000 பேர் இடம் பெயர்ந்த நிலையில், சிரியா – இஸ்ரேல் இடையிலான மோதலால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளின் ஆதரவுடன் சிரியா – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்தது. சிரியாவுக்கான அமெரிக்க தூதர் டாம் பராக், தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ட்ரூஸ் மற்றும் பெடோயின் இன மக்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு மற்ற பழங்குடியின மக்களுடன் சேர்ந்து சிரியாவில் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும் என டாம் பராக் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post சிரியா – இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: இனக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட அமெரிக்கா கோரிக்கை appeared first on Dinakaran.