சிரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அதிகளவிலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தெற்கில் உள்ள ஹமாவை நோக்கி கிளர்ச்சிக்குழுக்கள் முன்னேறின. சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.