பெய்ரூட்: பல ஆண்டாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு இடைக்கால அதிபராக அகமது ஷாரா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிரியா அரசின் பாதுகாப்பு படைகளுக்கும், அசாத் ஆதரவு போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
அதே சமயம், அரசு ஆதரவு பெற்ற சன்னி முஸ்லிம் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழு, அசாத்துக்கு ஆதரவான அலவைட் பிரிவினரை குறி வைத்து பழிக்கு பழி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதில் 2 நாளில் 745 அப்பாவி பொதுமக்களும், 125 அரசு பாதுகாப்பு படையினரும், 148 போராளிகளும் பலியாகி உள்ளனர். கொல்லப்பட்ட அலவைட் மக்களில் பலர் ஆண்கள். அவர்கள் தெருவிலும், வீட்டின் முன்பாகவும் குறைவான தூர இடைவெளியில் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். லடாகியா நகரில் பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
The post சிரியாவில் 2 நாள் மோதலில் 1,000 பேர் சுட்டு படுகொலை appeared first on Dinakaran.