சென்னை – பாரிமுனையில் குறளகம் எதிரே உள்ள உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர், சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளதால் இதன் வழியாக செல்லும் மெட்ரோ பயணிகள் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
இதற்கு தீர்வு காண மெட்ரோ ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம், அரசு அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள், பெரிய கடைகளுக்கு வந்து செல்வோருக்கு உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் பேருதவியாக இருக்கிறது.