திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
இதற்கு முன்னர் மாநில அளவில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வரால் பரிசு வழங்கப்பட்டது என்றார்.
இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் புருஷோத்தமன், செயலாளர் நந்தகுமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.