கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தக் கொடூர குற்றச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிஎன்எஸ்எஸ் 396 சட்டப்பிரிவின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபியை அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.