திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதையாக 4 வழிச்சாலையை ரூ.45 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது . பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதையாக 4 வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இதனை சுமார் 6 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4.6 கிலோ மீட்டர் நீளத்திற்குப் போடப்பட உள்ள இந்த சாலைக்காக, 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்க ‘வழி’ எளிதாகும் என அங்கு ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.
திருத்தணி மலைக்கோயிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முருகப்பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். திருத்தணி திருமலைகள் மாற்று வழி சாலையை ஆய்வு செய்து – திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் இலவச பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேல் திருத்தணி அமிர்தாபுரம் சித்தூர் சாலை இணைக்கும் வகையில் மாற்று மலைப் பாதை அமைப்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இலவச பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். ஆறுமுக சுவாமி திருக்கோவில் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தவில், நாதஸ்வர இசை பயிற்சி பள்ளியினை திறந்து வைத்தனர்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதை அமைக்க திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.