
புதுடெல்லி: சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் அரசு பயண ஆவணங்களை வழங்கியது. இவர்களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர்.

