புதுடெல்லி: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமாருக்கு (79) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் மட்டும் 2,800 பேர் உயிரிழந்தனர். டெல்லி உட்பட நாடு முழுவதும் 3,350 பேர் உயிரிழந்தனர்.