சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் அளித்த பேட்டி:
15 ஆண்டுகளை கடந்து செயல்படும் சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும். மாநில அரசை கேட்காமல் கட்டணத்தை உயர்த்துவது சுரண்டலாகவும் ஒடுக்குமுறையாகவும் மாநில உரிமைக்கு எதிராகவும் உள்ளது. சுங்கசாவடிகள் கட்டணத்தை குறைக்கவும் சுங்க சாவடிகளை அகற்றவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அளித்த பேட்டி: சாலைகளை கட்டமைக்க மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. என்பதற்காக சுங்கச்சாவடி கட்டணம் வாங்கப்படுகிறது என கூறப்படுகிறது. அதற்காகத்தான் தொடர்ந்து 15 ஆண்டு காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தாமல் இருக்கிறது. பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை வாங்குகிறோம் என மத்திய அரசு கூறுவது மோசடி செய்வது போல் உள்ளது. சுங்கச் சாவடி கட்டண உயர்வு மூலம் மறைமுகமாக கொள்ளையடிக்கிறது ஒன்றிய அரசு. இவ்வாறு அவர் கூறினார்.
The post சுங்கச்சாவடி கட்டண உயர்வு மூலம் மறைமுகமாக கொள்ளை அடிக்கிறது ஒன்றிய அரசு: சட்டப்பேரவை வளாகத்தில் விசிக எம்எல்ஏக்கள் பேட்டி appeared first on Dinakaran.