நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், ஆரியநாட்டை சேர்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன்(19). அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பாலமுருகன்(19). நண்பர்களான இருவரும், வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பொறியியல் 2வது வருடம் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் இருந்து ஆரியநாட்டுக்கு பைக்கில் சென்றனர்.
அக்கரைப்பேட்டை ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓர சுவரில் மோதியது. இதில் பைக்கில் இருந்து விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
The post சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.