சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடியில், ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இந்த படிப்புகள் இணையவழியில் வழங்கப்பட உள்ளன. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் மே 12ம் தேதி வரை https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பாடத் திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்ள pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இயற்பியலில் ஏஐ என்பது இயற்பியலில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளான இயந்திர கற்றல் மற்றும் நியூரல் வலை பின்னல்களைப் பயன்படுத்தி தீர்ப்பது குறித்து ஆராய்தல்.
வேதியியலில் ஏஐ- மூலக்கூறு கணிப்புகள் தொடங்கி ரசாயன எதிர்வினைகளை மாதிரிகளாக்குவது வரை- நடைமுறை தரவுத் தொகுப்புகள், பைதான் (Python) ஆகியவற்றைப் பயன்படுத்தி வேதியியலில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை அறிமுகப்படுத்துதல் கணக்கியலில் ஏஐ- வணிகம் மற்றும் மேலாண்மை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப் படிப்பு, கணக்குப்பதிவியல் கோட்பாடுகளை செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளுடன் இணைக்கிறது. பைதானை பயன்படுத்தி ஏஐ/எம்ஐ- செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகியவற்றுக்கான அடிப்படைப் படிப்பு, பைதான் புரோகிராமிங், புள்ளியியல், நேரியல் இயற்கணிதம், தேர்வு முறை, நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான தரவுகளை காட்சிப்படுத்துதல் போன்றவை அடங்கும்.
இந்த பாடத்திட்டங்களில் அனைத்து கல்விப் பின்னணியையும் (பொறியியல், அறிவியல், வணிகவியல், கலை, பல்துறை) சேர்ந்த இளங்கலை- முதுகலை மாணவர்கள் சேர முடியும். உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதில் சேர முடியும். ஏஐ குறித்த முன் கற்றல் அல்லது கோடிங் அனுபவம் தேவையில்லை, ஏனெனில் அடிப்படை டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் போதுமானதாக இருக்கும். இந்த பாடத் திட்டங்கள் ஐஐடி சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து வந்த நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post சென்னை ஐஐடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 ஏஐ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: 12ம் தேதி கடைசிநாள் appeared first on Dinakaran.