சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பிராட் கேஜ் 4வது பாதையில் ஆய்வு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின்சார பொறியாளர், சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பிராட் கேஜ் 4வது பாதையில் ஆய்வு மற்றும் வேக சோதனை நடத்தவுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சோமேஷ் குமார் (PCEE), சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4வது பாதையில் இன்று அன்று ஆய்வு நடத்த உள்ளார். ஆய்வுக்குப் பிறகு, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின்சார பொறியாளர், சென்னை கடற்கரை- எழும்பூர் பிரிவில் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 14:30 மணி வரை அதிவேக மின்சார சோதனை ஓட்டத்தையும் நடத்தவுள்ளார். சென்னை கடற்கரை-எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், ரயில் பாதைகளை அணுகவோ, அத்துமீறி நுழையவோ கூடாது என தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது.
The post சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பிராட் கேஜ் 4வது பாதையில் ஆய்வு சோதனை..!! appeared first on Dinakaran.