சென்னை: சென்னை காவல் மோப்ப நாய் பிரிவுக்கு 5 பரிசுகள், வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல் ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை காவல் வழக்குகளில் துப்பு துலக்க, பெரிதும் உதவியாய் மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. கடந்த 18 மற்றும் 19ம் தேதி ஆகிய 2 நாட்கள் மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானத்தில், தி மெட்ராஸ் கேனைன் கிளப் (The Madras Canine Club) நடத்திய வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில் நாய்களுக்கான கீழ்ப்படிதல் மற்றும் திறமைகள் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சென்னை காவல் மோப்ப நாய் படை பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்கள் ஸ்னோப்பி, சார்லஸ், அர்ஜுன், தாமரை (Snoppy, Charles, Arjun, Tamarai) கொண்ட அணி உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து சில அணிகளும் கலந்து கொண்டன.
நடத்தப்பட்ட கண்காட்சி போட்டியில் சென்னை காவல் மோப்பநாய் படை பிரிவைச்சேர்ந்த அணி கீழ்படிதல் பிரிவுகளில் 5 பரிசுகளை பெற்று சென்னை காவல் துறைக்கு பெருமை சேர்த்தனர். சென்னை காவல் ஆணையாளர் அருண், நேற்று கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மோப்ப நாய்கள், மற்றும் மோப்ப நாய்களை கையாண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களான உதவி ஆய்வாளர்களை பாராட்டியும், மோப்ப நாய்களை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தும் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் உடனிருந்தார்.
The post சென்னை காவல் மோப்ப நாய் பிரிவுக்கு 5 பரிசுகள்; வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், போலீசாருக்கும் காவல் ஆணையர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.