சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மேம்பாலம் கட்டப்படவேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.8.46 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் கூட்டு ரோடு முதல் சிறு நெசலூர் பாலம் வரை 1.25 கி.மீ நீளத்துக்கு பாலம் கட்ட முடிவு செய்து, இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த 2019 ஜூலை 31-ம் தேதி நடத்தியது.
திட்டமிட்டுள்ள மேம்பாலத்தால் கனரக வாகனங்கள் அடுத்தடுத்த மேம்பாலங்களில் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் என்பதால் வேப்பூர் நான்குமுனை சந்திப்பில் இருந்து சிறுநெசலூர் வரை ஒரே மட்டத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அக்கருத்தை பரிசீலிக்காமல் பாலப் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது.