பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் இனசுழற்சி விவரங்களள கூடுதல் கல்வி அலுவலர். கல்வித்துறை சத்துணவுப்பிரிவு அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை 400 003 மற்றும் முதல் 15 மாநகராட்சி மண்டலங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம் ரிப்பன் கட்டடம் மற்றும் முதல் மாநகராட்சி மண்டலங்களிலும் தகவல் பலகைகளில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டல அலுவலகங்களிலும் மற்றும் மாநகராட்சி தலைமையிடத்திலும் ஒப்படைக்கலாம்.
தொகுப்பூதிய விவரம் : தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரண்டு மாத காலம் பணியினை முடித்தபின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.
இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
வயது வரம்பு
1. 21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
2 20 முதல் 40 வரை (விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)
குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4% சதவீதம் இட ஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையாள அட்டையுடன்) விண்ணப்பிக்க வேண்டும்.
1 குறைவான பார்வைத் திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது)
2. உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
3. குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டுத் திறன். உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது) திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
5. குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)
6. காதுகேளாதோர் (கருவி பொறுத்தப்பட்டவர்)
7. குள்ளத்தன்மை கொண்டவர்
விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்:
1 பள்ளிமாற்றுச் சான்றிதழ்
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
4. இருப்பிடச் சான்று
5. ஆதார்அட்டை
6. சாதிச் சான்று
7. விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ்
8. மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அஞ்சல் துறையின் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை சத்துணவுப்பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை 600 003″ அவ்வாறு அஞ்சலில் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.
வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுவலர்களிடமோ அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
காரணம் எதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கு /திரும்ப பெறுவதற்கு / திருத்துவதற்கு / கெடு தேதியினை நீட்டிப்பதற்கு நியமன அலுவலருக்கு முழு உரிமையுண்டு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post சென்னை பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் appeared first on Dinakaran.