சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக புழலில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் வழக்கமாக ஜனவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜன.13 முதல் தீவிரமடைந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் பொங்கலுக்கு முன்பாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், பொங்கல் முடிந்த பிறகு, நேற்று முன்தினம் மாலையில் இருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.