சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
போட்டியின் தொடக்க விழாவில் வருமான வரி தலைமை ஆணையர் சுதாகர ராவ், விக்ரம் ரதி, ஆர்வி.எம்.ஏ.ராஜன், வெற்றிவேல், சுரேஷ் குமார், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.