சென்னை: சென்னை தேனாம்பேட்டை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அதிவேகமாக, பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தவர் மற்றும் டீ கடையில் இருந்தவர்கள் 5க்கும் மேற்பட்டோர் மீது மோதியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்து ஹபீஸ் அகமது என்பவர் போலீசார் கைது செய்யப்பட்டு அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தையோ ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹபீஸ் அகமது நந்தனத்திலிருந்து தேனாம்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை எழுதியதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் பாண்டிபஜார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.