சென்னை: சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர் திவாகர் (25) கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 104 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு ,மும்பை, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி சென்று போதைப் பொருள்களை வாங்கி வந்து சென்னையின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
The post சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர் கைது. appeared first on Dinakaran.