சென்னை: சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 12 பெட்டிகளுடன் ஏசி புறநகர் ரயில் தயாரிக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் புறநகர் ஏ.சி. ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது. 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
ஏ.சி. புறநகர் ரயில் கட்டண விவரம்;
புறநகர் ஏ.சி. ரயிலில் குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே ரூ. 105, கடற்கரை தாம்பரம் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – எழும்பூர் இடையே ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது! appeared first on Dinakaran.