சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத் தில் சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட் டுதலின்படி, ஒரு பகுதியின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சத வீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும்.
அப்படியெ னில் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னையில் 22.70 சதுர கிமீ (வெறும் 5.28 சதவீதம்) அளவே பசுமைப் போர்வை உள்ளது.