சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை மேற்கு செல்லூர் கே.ராஜூ (அதிமுக) பேசுகையில், “எங்களுடைய பரவை பேரூராட்சி, சமயநல்லூர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காகவும், அதே பகுதியில் விவசாயம் செய்வதற்காகவும் தடுப்பணை எங்களுடைய ஆட்சியில் வரைபடம் போடப்பட்டு, நிதிக்காக ஒதுக்கப்பட்டது. அதை திரும்ப இந்த ஆண்டு நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து துரைமுருகன் பேசுகையில், “தடுப்பணை கேட்டீர்கள் கொடுத்துவிட்டேன். முன்னர் கொடுத்தேனே! அது என்ன?” என்றார்.
செல்லூர் கே.ராஜூ: ஆமாண்ண…
துரைமுருகன்: இப்போது உங்களுக்கு என்ன வேண்டும், தடுப்பணை வேண்டுமா?
செல்லூர் கே.ராஜூ: ஆம்.
துரைமுருகன்: உட்காருங்கள்.
செல்லூர் கே.ராஜூ: சரி.
பின்னர், சபாநாயகர் அப்பாவு சிரித்துக்கொண்டே அடுத்த கேள்விக்கு சென்றார்.
The post செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர் சுவாரஸ்ய பதில் appeared first on Dinakaran.