சென்னை: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி, மேன்மைப்பண்பு கொண்ட தலைவராகத் தொடர்வது என அவரது வாழ்க்கைப் பயணம் அவரது போராட்டக்குணத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது. வெற்றியும் அமைதியும் நிறைந்து – நீண்டகாலம் அவர் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.