திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அருகே, ஜங்காலப்பள்ளி கிராமத்தில் உள்ள மேல் ஜங்காலப்பள்ளியில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்யப்பட்டு 3 நாள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை மஹா பூர்ணாஹூதி ஹோம பூஜைகளை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், கிராமமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இதனையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கோயில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
The post ஜங்காலப்பள்ளி கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.