குரேஸ்: ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் குரேஸ் செக்டாரில் நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குரேஸ் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்