ஜெனிவா: தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் 58வது அமர்வில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஷித்திஜ் தியாகி பதில் அளித்தார். அவர் தனது பதிலில், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தனது பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்துகிறது.