புதுடெல்லி: முகம்மது அலி ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் பிரபு ஆகியோரே தேசப் பிரிவினைக்கு காரணம் என்று என்சிஇஆர்டி (NCERT) குறிப்பிட்டுள்ளது.
பிரிவினையின் துயரத்தை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT ) வெளியிட்டுள்ள சிறப்பு தொகுப்பில், "இந்திய பிரிவினை தவறான கருத்துகளால் ஏற்பட்டது. இந்திய முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் லீக், 1940-ல் லாகூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் பேசிய அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்க வழக்கங்கள், இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.