புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தொடரின் இரண்டாவது போட்டி தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கேப்டனாக ஷுப்மன் கில் வெல்லும் முதல் டாஸ் இது. இதற்கு முன்பு அவர் தலைமையில் இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் டாஸை இழந்துள்ளது.