வாஷிங்டன்: “உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் புதினுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவர் அது தொடர்பாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் பேட்டி அளித்துள்ளார்.