சென்னை: ஞானசேகரனிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.