சென்னை: டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், டங்ஸ்டன் ஆலைக்கான ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என்று அறிவித்தார்.