மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக உண்மையான பாராட்டு பெற தகுதியானவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே என பாராட்டு விழாவில் மக்கள் புகழாரம் சூட்டினர். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வல்லாளபட்டியில் பொதுமக்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியும், பாஜக மாநில தலைவர் அண்ணா மலையும் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் வந்தனர். மதுரை விமான நிலையத்தில் இருவரையும் பாஜகவினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் இருவரும் ஒரே காரில் வல்லாளபட்டிக்கு புறப்பட்டனர்.