
கவின் நடிக்கும் டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். ஆண்ட்ரியா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக் ஷன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சென்னையை மையமாகக் கொண்ட இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கண்ணுமுழி’ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் ஓடிடி உரிமையை ஜீ 5 பெற்றுள்ளது. திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு ஜீ 5 தளத்தில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

