லாடர்ஹில்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் நேற்று முன்தினம் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் சல்மான் அகா 38, ஹசன் நாஸ் 40. பகர் ஸமான் 20 ரன்கள் சேர்த்தனர்.