திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் குவித்தார்.