சென்னை: பராசக்தி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952ம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பெருமாள் முதலியார் தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.
அந்தத் திரைப்படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் ஆட்சேபித்த போதும், பெருமாள் முதலியார் பிடிவாதமாக சிவாஜி கதாநாயகனாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படம் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர் திலகம் சிவாஜி உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டுள்ளோம். இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும்.
The post டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டம் பராசக்தி படத்தின் பெயரை பயன்படுத்த வேண்டாம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.