ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் 658 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 234 ரன்களுக்குச் சுருண்டு தோற்றது. நியூஸிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்று இங்கிலாந்து வென்றாலும் நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் முடித்தது. இது நியூஸிலாந்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியாகும்.
இந்த டெஸ்ட் போட்டியுடன் டிம் சவுதி ஓய்வு பெற்றார். 107 டெஸ்ட் போட்டிகளில் சவுதி 391 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிட்டத்தட்ட 16-17 ஆண்டுகாலம் நியூஸிலாந்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். பேட்டிங்கில் 107 போட்டிகளில் 2245 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 77 மற்றும் 98 சிக்சர்களுடன் சாதனை நிகழ்த்தியுள்ளார்.