வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக அளவு வரி விகித்து வருகிறார். இதே போல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு பொருளுக்கும் இந்தியா அதிக அளவு வரிவிதிப்பதாகவும் குற்றம் சாட்டி வந்த அதிபர் டிரம்ப், இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனெனில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் வரிவிதிப்பில் அமெரிக்கா நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போன்கள் தான் அதிக அளவு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் சப்ளை செய்யப்பட்டது.
ஆனால் சீனா மீது டிரம்ப் அதிக அளவு வரிவிதிப்பு அமல்படுத்தியதால் அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது சீன நிறுவனங்களில் செய்யப்படும் ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற விரும்பினர். குறிப்பாக சென்னையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய ஆலை அமைக்க அவர் முடிவு செய்தார்.
அந்தத் திட்டம் டிரம்பிற்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிரம்ப், ஆப்பிள் ஐபோன் இறக்குமதி மீது புதிய வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,’ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் மீது 50% வரிகளும், மற்ற நாடுகளில்( இந்தியா) இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் மீது 25% வரியும் விதிக்கப்படும்.
ஆனால் ஐபோன் தயாரிப்பு அமெரிக்காவில் நடந்தால் எந்த வரியும் இல்லை. அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவில் அல்லது உலகத்தின் வேறு எங்கும் தயாரிக்கப்படக்கூடாது. மாறாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு கட்டமைக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்தேன். அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post டிரம்ப் அடுத்த அதிரடி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போனுக்கு 25% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு 50 சதவீதம் appeared first on Dinakaran.