டொனால்ட் டிரம்பின் கடந்த ஆட்சியில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான அவரது நட்பு பரவலாகப் பேசப்பட்டது. அவரை மீண்டும் தொடர்புகொள்ளப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், கிம் ஜாங் உன்னின் எதிர்வினை எப்படி இருக்கும்? அவர் இப்போதும் நட்புணர்வுடன் இருப்பாரா?