வாஷிங்டன்: டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார். தனது ஆட்சியில், அந்நிய செலாவணி போல கிரிப்டோகரன்சி கையிருப்பு உருவாக்கப்படும், தொழில்துறையினரும் கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தும் வகையில் நெறிமுறைகள் வகுக்கப்படும், இதற்காக ஆட்சியின் முதல் 100 நாளில் சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டிரம்ப் கூறி உள்ளார். இதனால் அவர் அமெரிக்க அதிபராக நேற்று பதவியேற்கும் முன்பாக, கிரிப்டோகரன்சிகள் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தன. முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு 1 லட்சத்து 9 ஆயிரம் டாலருக்கு உயர்ந்தது.
அதிபர் தேர்லில் டிரம்ப் வெற்றி பெற்ற போதே முதல் முறையாக பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை தாண்டிய நிலையில் பின்னர் 90 ஆயிரத்திற்கு சரிந்தது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 9000 டாலர் அதிகரித்துள்ளது. இதனால் கிரிப்டோகரன்சி வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post டிரம்ப் பதவியேற்பு எதிரொலி 1 லட்சம் டாலரான பிட்காயின் மதிப்பு appeared first on Dinakaran.