சென்னை: சசிகுமார், சிம்ரன் நடித்தா ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.