ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆண்டான 2008-ல் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. இதன் பின்னர் பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2014-ம் ஆண்டு அந்த அணி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. இதுவரை முடிவடைந்துள்ள 17 சீசன்களிலும் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே சீசன் அது மட்டுமே.