புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை காலை முதல் மாலை வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை 5-ம் தேதி தேர்தல்நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.