புதுடெல்லி: டெல்லியில் வாழும் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2015-ல் டெல்லி ஜாட் சமூகத்தினரின் தலைவர்களை பிரதமர் இல்லத்துக்கு பாஜக அழைத்து பேசியது. அப்போது மத்திய ஓபிசி பட்டியலில் டெல்லி ஜாட் சமூகத்தினர் சேர்க்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. 2019-ல் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.