புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி மாநில சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய பார்வையாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜகவின் தேசியச் செயலாளர் ஓம் பிரகாஷ் தங்கர் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.