காரைக்குடி: “டெல்லியில் அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக பங்கேற்காதது ஏன்?” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: ''அரசியலமைப்பு சட்டத்தில் 370-வது பிரிவை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை. அவர் மீது மரியாதை செலுத்துவோரும் இந்த பிரிவை ஆதரிக்க மாட்டர். கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சி செய்தது. அதற்கு பாவ பரிகாரமாக தான் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தற்போது காங்கிரஸார் கையில் வைத்துக் கொண்டு திரிகின்றனர். இது ஒரு நாடகம்.