புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3-வது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார்.