துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 898 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அதே அணியைச் சேர்ந்த ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (812), இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811) ஆகியோர் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.